தூய காவல் தூதர்கள் ஆலயம்

இறையருளின் இல்லமாய்

இறையுணர்வின் அடையாளமாய்

உறவுகளின் சங்கமமாய்

     ஆலயம் தொழுவது சாலமும் நன்று . ஆம்  97 ஆண்டுகளுக்கு முன் மேல்புறம் மக்களில் ஏற்பட்ட நல் மாற்றத்தின் பயனாக,பல நல்லோர்களின் நல்வினையின் பயனாக இறையனுபவத்தின் உந்துததால், நம்பிக்கையின் நற்கனியாய் குன்றின் மேலிட்ட  விளக்காய் உன்னதர் இயேசுவின் உயர் மதிப்பீடுகளை உள்வாங்கி தூய காவல்தூதர்களைப் பாதுகாவலராக்கி செம்மாத்து நிற்கும் தூயகாவல் தூதர்கள் ஆலய வரலாறு இது .

உயர்ந்து நிற்பதே ஆலயம்

     இந்தியநாட்டில் தென்கோடியில் முக்கடலும் சங்கமிக்கும், காலையும் மாலையும் சூரியனும் சந்திரனும் சந்திக்கும் கண்கொள்ளா காட்சிதனை தன்னகத்தே கொண்டுள்ள கன்னியாக்குமரி மாவட்டத்தில் , முக்கனிகள் சூழ்ந்திருக்கும் தமிழும் மலையாளமும் கூடி குலவும் எழில் கொஞ்சும் விளவங்கோடு வட்டத்தில் இடைக்கோடு , பாகோடு , மருதங்கோடு , வெள்ளாங்கோடு என்ற பேரூர்களின் எல்லையாய் மையமாய் வளம்கொழிக்கும் வற்றாத நீர்நிலைகள் , வயல்வெளிகள் , அழகுமிகு சோலைகள் அதில் உலா வரும் தென்றல் என அழகான  ஊராம் மேல்புறத்தில் காலத்தின் சுழற்ச்சியால் மனதிலோ மாற்றம் , அன்புறவிலே ஏற்றம் , சாதியிலே வர வேண்டாம் சீற்றம் என எண்ணம் கொண்டு நல்லோர் பலரின் உந்துதலால் நற்றலத்தால் உருவானதே மேல்புறம் காவல் தூதர்கள் ஆலயம் .

     குமரி  மாவட்டத்தில் காவல் தூதர்கள் பெயரில் தோன்றிய முதல் ஆலயம் இதுவே .

ஆலய உருவாக்கம்

         திருத்துவபுரம் மறைமாவட்டத்தின் திருத்துவபுரம் பங்கு அருட்பணியாளராக இருந்த அருட்தந்தை இன்னாசெண்ட அவர்களின் முழுமுதற் முயற்சியாலும் அயரா உழைப்பாலும் தூய காவல் தூதர்கள் ஆலயம் கட்டப்பட்டு 1923 அக்டோபர் 02-ஆம் நாள் அருட்த்தந்தை இன்னசென்ட்  அவர்களாலேயே அர்ச்சிக்கப்பட்டது . ஆலயத்திட்கு தூய  காவல் தூதர்களை பாதுகாவலராக அறிவித்தவமாரும் அவரே .

            இவ்வாலயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது அருட்பணியால் இன்னாசென்ட் அவர்கள் பின்வரும் பாடலை பாடிக்கொண்டே பணிகளைக் கவனிப்பாராம் .

            சொந்த தேசம் இத்தாலி

            சுற்றும் தேசம் மேல்புறம்

            கட்டும் கோயில் ஐப்புறம்

            கடவுள் வாசம் மேல்புறம்

என்பதே அப்பாடல்

     ஆலய சுவர்கள் அனைத்தும் கருங்கல்லால் ஆனது. ஆலயப் பீடத்தின் பின் சுவற்றில் துணிதிதிரை ஒன்று கட்டப்பட்டிருக்கும். அதில் காவல் தூதர் படம் ஒன்று இத்தாலி நாட்டு கலைநயத்துடன் வண்ணம் தீட்டப்பட்டு அழகோவியம் அமைக்கப்பட்டிருந்தது. காலமாற்றத்தால் திரைச்சீலை மால்லம் பெற்றும் சுவர் ஓவியமாய் காட்சிதந்தது.

தனிப்பங்கு

                1936-ல் பாக்கியதுரம் தனிபங்காக்கப்பட்ட போது மேல்புறம் அதன் கிளைப் பங்காக்கப்பட்டது. 1667-ல் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு ஆன்சி சுவாமி சே.ச அவர்கள் மேல்புறத்தைத் தனிப்பங்காக அறிவித்தார்.

     மஞ்சாலுமூடு (லுர்துகிரி) ஆலயம் தனிப்பங்காகப்பட்டபோது- பிலாவிளை அதன் கிளைப் பங்காக்கப்பட்டது. அந்நேரம் திரித்துவபுரத்தின் கிளைப்பங்குகளாக இருந்த வட்டவிளை, பரக்கோணம் ஆலயங்கள் மேல்புறத்தின் கிளைப்பங்குகளாக்கப்பட்டன. இவை யாவும் மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்களால் ஏற்பட்ட சீர்திருத்தங்கள்,

புதிய ஆலயம்

தூய காவலர் தாதர்கள் ஆலயம் அமைத்து 75 ஆண்டுகள் ஆன போது 199 ஆண்டு பவள விழா கொடண்டாடப்பட்டது. இந்நிலையில் ஆலயம் கட்டப்பட்டு 80  ஆண்டுகள் நிறைவடையும்  இன்று  மேல்புறம் பங்கு  பல்வேரு பயிற்சிகளாலும், முயற்சிகளாலும்  முதிர்ச்சி பெற்று கல்வி ,கலை , ஆன்மீகம் என அருள்பணியாளர்களின் அற்ப்பண செயல்களால் தழைத்தோங்கி கொண்டுஇருக்கிறது.

கிறிஸ்துவின் இறையாட்சிப்பணிகள் 

     காலத்தின் குறிகளுக்கேற்ப  சமூகநோக்குடன்,வளர்ச்சியின் பாதையில்  பரிணமித்துக்கொண்டிருக்கின்றன. என்பது பெருமைக்குரியது ..

              தூய காவல் தூதர்கள் அருட்துணையும்

              தூய அன்னை மரியாவின் இடைவிடா இறைவேண்டலும்

 ஆண்டவர் இயேசுவின் உடனிருப்பும் மேல்புறம் பங்கினை என்றென்றும் வழிநடத்தட்டும்.